This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, March 27, 2018

மனித உறுப்புகள்

மனித உறுப்புகள் யாவும் தமது வளர்ச்சிக்கென, தேவையானவற்றை இயற்கை மூலத்தினின்று கிரகித்துக் கொள்கிறது. பேரறிவு உடைய மனிதன்தான் இயற்கைக்கு மாறாக நடந்து, உடல் தோற்றத்தில் மாற்றமில்லாவிடினும் தனது பண்புகளைக் கெடுத்துக் கொள்கிறான். எனவே, இயற்கையில் மனிதனே பிற உயிர்களை விட எளிதில் நோய் வாய்ப்படுகின்றான். தெய்வ அருள் மனிதனின் இயல்பை மாற்றி உடலுக்கு நலமுட்டும்.

குழந்தைகள் யாவும் ஏககாலத்தில் பிறக்குமாயின். அவை ஒரே சமயம் உண்டாவதை, இரட்டைப் பிள்ளைகள் மூலம் அறியலாம். ஆயின், கருவுறுகையில் மட்டும் இவ்விதி பொருந்தாது. காரணம், கரும விதிப்படி தன் உடல் சுபாவத்தில் எது உள்ளதோ, அதையே சொந்தமாகக் கொண்டு பிறத்தலால் வேறுபாடுகள் ஏற்படும்.

மனிதனிடம் உடலின் வெளி அமைப்பு - உள் அமைப்பு என இரு கூறுபாடுகள் உண்டு. முதலாவது தூலமும் - அடுத்தது சூக்குமமும் ஆகும். எனவே, இவற்றை அறிந்து கொண்டால், மூலப் பொருள் வழியாய் நோயையும் - அதனை நீக்கும் முறையையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும், மனிதன் தனக்கு இயல்பிலேயே அமைந்த முழுமை சக்தியை, சரியான வழியில் காட்டத் தடுக்கும் மாயையினைக் கடந்து விட்டால், மேற்படி இயற்கை சக்தி தனது முழுமையைக் காட்டத் தொடங்குவதால், யோகிகளைப் போல் அரிய சக்திகளைப் பெறலாம். 

நோய்கள் இயற்கையில் தானே உண்டாகி-பிறகு தானே விலகும். எனவே, மருத்துவன் இவ்வியற்கையின் போக்கை அறிய வேண்டும். இதனை அறிந்தவனே மனித உடலைமப்பின் கூறுபாடுகளையும் அறிந்தவனாவான். வைத்தியத்தில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருப்பினும், சோதிட அனுபவமில்லாவிடில் பயனில்லை. மேலும் பஞ்சபூதங்களின் பஞ்சீகரண சக்தியை அறிந்தவனால் மட்டுமே ஒரு உலோகத்தை வேறொரு உலோகமாக மாற்றவியலும். காரணம், உலகின் யாவுமே ஆதிமூலத்தினின்று தோன்றியதே தவிர - ஏகம், கூட்டு என்ற பிரிவினையே கிடையாது. யாவும் ஒன்றிலொன்றின் கலப்பேயாகும். ஆத்துமா ஒன்று மட்டுமே ஏகமாகும்.

Reference book : Siddha Maruthuva Gurugulam

Monday, March 26, 2018

வாதம் - மந்திரம்

ஒருவன் பொன் செய்யும் வித்தை எனக்கூறப்படும் வாதமுறையில் வெற்றி பெற வேண்டுமாயின், எப்படி ஒருவன் பிறவி வைத்தியனாக இருக்கின்றானோ, அதுபோல் - பிறவி வாதியாகவும் இருப்பதோடு, ஆத்தும ஞானமுடனும் திகழ வேண்டும். அவன் பூர்வகருமப்படி, பிறக்கும்போது கிரகங்கள் சரிவர அமைந்திருக்கவும் வேண்டும். உடலும் - மனமும் எவ்விதக் குற்றமுமின்றி பரிசுத்தமாயிருந்தால்தான் வாதம் சித்தியாகும் முப்பு என்பதின் ஆதிமூலப்பொருள் தான் ஆத்துமாவிள்ளது. எனவே, வாத நூல் என்பதின் ஒரு பகுதிதான் மானத இரசாயனமாகும். வாதத்தை இலாபம் கருதிச் செய்யலாகாது. இங்ஙனமே, மாயவித்தை எனப்படும் மாந்திரீகம் ஆதிசித்தர் காலம் முதல் தொன்றுதொட்டு வருவதாகும். இதனால், கண்ணுக்குப் புலப்படாத இரகசியமான சக்திகளைக் கொண்டு, வெளிப்படையாகத் தோன்றக்கூடிய செயல்களைப் புரியலாம். மனோசக்தியின் வலிமையினால் ஒருவரையும் அவரது சுற்றுப்புறத்தையும், மின் சக்தியைப் போல் கவர்ந்திழுக்கலாம். மதச்சடங்குகளின் அடிப்படையும் இதுவேறாயினும் - வேறு தந்திரச் சடங்குகளுடன் இதனை ஒப்பிடக்கூடாது. இதனால் - பிணிகளைக் களைதல், எதிர்கால நிகழ்வுகளைக் கூறுதல் முதலிய நற்செயல்களை மட்டுமின்றி - பில்லி, சூனியம், வசியம், ஈடு போன்ற தீச் செயல்களையும் செய்யலாம். சித்தர்கள் விளையாட்டாகச் செய்யும் அற்புதங்களும் மாதவித்தையாகவே கொள்ளப்படும்.

உலகின் மனிதகுலத்திற்கென ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளவை பற்றியும் - அவர்கள் எவ்வித இடையூறுமின்றி உயிர் வாழுவதற்குரிய வசதிகளைப் பற்றியும் சித்தர்கள் கொண்ட கருத்துக்களாவன. 

1. உலகின் மனித குலத்தோற்றம் 

குலத்தோற்றமும் - வாழ்வும் - பிணிகளும் - மருத்துவக் கொள்கையும் முக்காலத்திலும் ஒன்றேதான். காரணம், படைக்கும் காலத் தொடக்கம் முதல், தனிப்பட்ட முறையில் மானுடப் போக்கும் - ஒழுங்கும் இறைவன் வகுத்தவாறே உள்ளது - இனியும் அப்படியேதான். எவ்வித மாறுதலுமின்றியே இருக்கும். மனிதன் தோன்றியபோதே மருந்துகளும் உண்டாகிவிட்டன. 

2. அண்டமே பிண்டம் - பிண்டமே அண்டம்

மனிதனே உயிரினங்களுள் மேம் பட்டவன். பிறவற்றில் காணப்படாத தேர்ந்த பேரறிவு இவனுக்கு மட்டுமேயுண்டு. இவன் தன்னுள்ளிருக்கும் அண்டத்தை ஆகாயத்தின் ஒரு பகுதியாகப் பெற்றுள்ளான். எனவே, நவக்கிரகங்களும் - பஞ்ச பூதங்களும் அதனதன் வலிமையை அவனுள் செலுத்துகையில், அதன் இயற்பிற்கேற்ற நல்ல - தீய பலன்களை அடைகின்றான். உலகைக்காக்கும் தேவதைகளின் இயல்பினால், இயற்கையில் கேடுண்டாயின் பெருவாரி முதலிய தொற்று நோய்கள் கண்டு, அதனாலான நச்சுத்தன்மை மனிதனையும் தாக்கும். ஆத்ம கோளத்தினுள் உள்ள தொற்றுக் கிருமிகளால் காரணமுண்டாகி இயல்பான சூக்குமக் காரணங்களை அனுசரிப்பின், கொள்ளை நோய்கள் ஏற்பட்டு அழிவுகள் ஏற்படும். மேலும், மனிதனின் குருதி - செவ்வாயையும், ஆத்தும நிலைகள் - சுக்கிரனையும் தழுவி நிற்கும். உயிரினத்துக்கு சுக்கிரனின் தொடர்பில்லாவிடில் இனவிருத்திக்கு எதுவான காம விச்சையே ஏற்படாது. இருபாலருக்கும் ஏற்படும் காம நட்புக்கு சுக்கிரனின் அம்சம் அவசியம் தேவை.

சுத்த சக்தி

சுவாசம் அல்லது மூச்சு என்பது உடலின் சகல இயக்கங்களுக்கும் ஆதாரமாயுள்ளது. மூச்சில்லாவிடில் உயிர் கிடையாது. மனித உடலாகிய இயந்திரம் - சிசுவாகப் பிறந்தது முதல் தொடங்கும் மூச்சு, அவன் இறக்கும் முன் இறுதியாக திணறும் மூச்சாகும் வரை ஊடாடிக் கொண்டிருக்கும். இதனையே சுத்த சக்தி எனவும் பிராணா எனவும் கூறப்படும். சாதாரணக் காற்றிலுள்ள இப்பிராண சக்தியினால்தான் சகல செயல்களையும் - சித்திகளையும் அடைய வியலும். எனவே, உடலை வளர்த்து, மூச்சுப்பயிற்சியின் மூலம் உயிரை வளர்த்தனர். மேலும் - பிரகிருதி சுபாவத்தில், இறப்பு என்பது மனித வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொள்வதில்லை. மனிதன் - காலங் காலமாகப் பழகி வரும் அறியாமையாலும், அச்சத்தாலும், தன்னைத்தானே தவறாகக் கருதுவதாலும் தான் மரணமடைகின்றான். ஆனால், சித்தர்களோ - உடலின் அணுத்திரள் சக்திகளை, தனது ஆன்ம சக்தியால் தகுந்தபடி மீண்டும் ஒழுங்கு படுத்துவதன் மூலம் நோயையும் - மரணத்தையும் வெற்றி கொண்டு, என்றும் நிலைத்திருப்பர்.

அண்டமும்-பிண்டமும்

சித்தர்களின் கருத்துக்கள்

சித்தர்களது கருத்துக்கள் பலவாகும்.

அவை அண்டமும்-பிண்டமும்

வெளியுள்ள அண்டமாகிய இவ்வுலகத்திற்கும்-பிண்டமாகிய மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உண்மையில் மனிதன் அண்டத்தின் ஓர் சிற்றுருவமே தவிர வேறில்லை. எனவே, பிரகிருதியின் மூலப்பொருட்களினால், உடல் ஒரு பாகமாக ஏற்பட்டுள்ளது போல், அவனது ஆன்மாவும்-மனதும் உள்ளபடியே உடலில் ஒரு பகுதியாக உள்ளது அவன் தாதுக்கள்-த்துவங்களோடு அண்டத்தின் சிறு பாகத்தையும் கொண்டவனாகும். பஞ்ச பூதங்களே வெளி உலகிற்கும்-மனிதனுள்ளும் மூலக்காரணமாக உள்ளது. இவையே உலகத் தோற்றம், திதி, சங்காரம் இவற்றுக்கு ஏதுவாயுள்ளது. ஒவ்வொரு பூதமும், மற்ற பூதங்களுடன் கலந்துள்ளது. இவற்றின் இரகசியங்களையும், கோட்பாடுகளையும் அறிந்தவனால் ஒரு உலோகத்தை வேறொரு உலோகமாக மாற்றக்கூடும். ஏனெனில் சகலபொருளும் ஒரே ஆதி மூலப் பொருளினின்றே தோன்றியதாகும். எனவே ஏகபூதம்-கலப்பு பூதம் என்ற வேற்றுமையே கிடையாது. மேலும்-முக்குற்றங்களே உடலைமப்பிற்கும், பிணிகள் பற்றுவதற்கும் அடிப்படையாகும். வெளியுலகில் ஏதேனும் விகல்பம் தோன்றினால், மனிதனினுற்ற முக்குற்றத்திலும் இதே போன்ற விகல்பம் ஏற்படும். இந்த அண்டபிண்டக் கலப்புத் தொடர்புதான் முப்பிணிக் கொள்கைக்கும்-உடற் தத்துவ நூலுக்கும் மூலகாரணமாயுள்ளது. உண்மையில், உலகின் சகல பொருளிலும் முப்பிணியின் கலப்பு அதனதன் அளவிற்கேற்ப இருக்கவே செய்யும். மனிதனின் குணாதிசயங்களையும் இதன் செயலினின்று பிரிக்க முடியாது. (பஞ்சபூதங்களுள் முப்பிணி என்பது=காற்று-நெருப்பு-நீர் ஆகும். இதுவே, உடலின் வாத-பித்த-கபம் ஆகும்)

பஞ்ச பூதங்கள் இந்த உடலை ஆளும் காலங்கள்

மண்ணின்கூ றிருபதாண்டு வளரப்புத் தேயு வாய்
விண்ணின்கூ றுடனே நூறு வயதென விளம்புமப்பால் எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்
பெண்ணின் மிக் காயமானே பிரிந்துநான் மொழிகின்றேனே.                    (23)

விளக்கம் 
1 முதல் 20 வயது வரை பிருதிவியும், 21 முதல் 40 வயது வரை அப்பும், 41 முதல் 80 வயது வரை வாயுவும், 81 முதல் 100 வயது ஆகாசமும் இந்த உடலை ஆளுகின்றன.

மனிதனுடைய ஆயுட்கால வாதம், பித்தம், கபம் தோஷங்களின் காலநிலைமை

அய்யுமுப் பத்துமூன்று வருஷமொன் றதிகநாலு
செய்யதிங் களுமாய்ப் பித்தஞ் செய்தியப் படியே சீராய்
உய்யவே வாதம் வந்த படியுறு வயது நூறாய்
தையலே வாகடத்தின் சாத்திரப் படிகள் தானே.                   (22)

விளக்கம்
மனிதனின் ஆயுள் காலம் சராசரி 100 என்று வைத்துக்கொண்டால், 1 முதல் 33 வயது வரை கபம் காலமாகும். 34 முதல் 66 வயது வரை பித்தம் கலமாகும். 67 முதல் 100 வயது வரை வாதம் அதிகரித்திருக்கும் காலமாகும்.

Reference book : Agathiyar 2000 Part-I

Friday, March 23, 2018

அகத்தியர் கூறும் கற்பம் உற்பத்தியாகும் ரகசியம்

ஆகனாள் விந்துவுண்டா யஞ்சானாள் கருப்போலாகிப்
போகமூ வஞ்சுநாழி(ளி)ல் பொருந்திய முட்டைபோல
மேகமாய்த் தீர்க்கமாகி யிரண்டினில் மார்மட்டாகிப்
பாகமா மூன்றாந் திங்கள் பகருந்தி மட்டுமாமே. (19)

மட்டுட னாலாந்திங்கள் வளர்ந்திட்டுப் பாதமெங்குங்
கட்டுட னஞ்சாமாதங் கருதுபூ ரணமா மாறில்
தட்டுட னெலும்புசீவன் தலையிர் நரம்புமேழில்
எட்டுட னறிவாமொன்ப தியல்தச பிறவியாமே. (20)

விளக்கம் :
கணவன்-மனைவி சேர்க்கைக்குப் பின்னர் 5-வது நாள் கருவானது நகரும்தன்மையை வந்தடையும். 15-வது நாள் முட்டைபோல் உருவாகும். நாட்கள் செல்லச் செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து குழந்தைக்கு மார்பு உண்டாகிறது. 3-வது மாதம் வயிறு ஏற்படும். 4-வது மாதம் குழந்தைக்குக் கை, கால் உண்டாகும். 5-வது மாதத்திலும் மேல்கூறிய உறுப்புகள் நன்றாக வளருகின்றன. 6-வது மாதத்தில் எலும்பு, தலை, மயிர், நரம்பு முதலியவைகளுடன் 7-ஆம் மாதம் குழந்தைக்கு சீவனாகிய உயிர் உண்டாகும். 8-வது மாதம் குழந்தைக்கு அறிவு மற்றும் உணர்ச்சிகள் ஏற்படுகிறது. 9-வது மாதம் முதல் பிரஸவ காலமாகும். இந்த காலத்தில் அல்ட்ரா சவுண்ட் மற்றும் யு.எஸ்.ஜி. அலோகா மெஷின் கண்டுபிடிக்கும் கருவளர்ச்சியை, நம் முன்னோர் வாழ்ந்த காலத்தில் எந்த இயந்திரமும் இல்லாமலேயே கண்டுபிடித்தார்கள் என்பதை நினைக்கும்போது எவ்வளவு பெருமைக்குறியது.

Thursday, March 22, 2018

சித்தர்கள் பற்றிய விபரம்

சிவனே சித்தன் என்றும் அவர் தம்வழி மரபினரே தமிழ் மக்கள் எனவும் கூறுவது உண்டு. சித்தர்கள், பொய்ப்பொருளுக்கு மெய்பொருள் கண்டுணர்ந்தோராவர் - வாயு - மனோவேகத்தில் திசைகளும் திகந்தங்களும் சுற்றி வருவோர் - மேருமுதல் துருவம் முடிய சுற்றும் பரிதியென விளங்குவோர் - எழுகடலையும் தம் அங்கையில் ஏந்திப் பருக வல்லோர் - பரிதி, மதி, வையம் இவற்றை குடுகுக்குள் காட்ட வலியோர் - பாரினில் கற்பக மரத்தையும் உற்பவிப்போர் - கலையையும், செல்வத்தையும் இரு பணியாளராக்குவோர் - கேட்டது கொடுத்துவர நிற்க வைப்போர் - பரந்த நீர்ப்பகுதியையும் ஒரு கேணியில் குறுக்குவோர் - உற்பத்தியாளனையும் உலகையும் போகனு பவத்தில் உறங்குவிப்போர் - பஞ்சப் பொருட்களும் ஒன்றிலொன்று ஒடுங்குகையில் பரவெளியில் வெளியாகுவோர் - பிரளயத்தில் நீரில் வாழும் வண்டெனத்துவண்டு சிவயோக நிலை நிற்போர். நெடிய முகிலேழும் பரந்து பெய்கின்ற காலை நிலவின் நடுவில் ஊரென விளங்குவோர். பெரும் புயலில் மேருவென அசையாதிருப்போர் - இரவு பகலற்ற இடத்திலிருப்போர் - சாகா நிலைதனில் சாகாதிருப்போர் - புசிப்பிற் கலைந்திடார் - ஓட்டினையெடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவோர். இத்தகு சிறப்புமிக்க சித்தர்களால் வாதம், வைத்தியம், யோகம், மந்திரம், கணிதம், வின்வெளி ஆய்வு உட்படக் கூறாத பொருள் ஒன்றில்லை. மேலும் சித்தர்கள் என்பவர்கள் சித்தத்தில் சிந்தித்தப்படியே உடலும், உண்பனவும் பெற்று அனுபவிக்கின்றவர்களாகும். இவர்கள் சிவநெறியைப் பூண்டு ஒழுகிய சித்தசமயத்தைச் சார்ந்த தமிழ்மக்களாகும். சிவநெறியிலுள்ள கிரியைகளையும், விதிகளையும் விலக்கிவிட்டு ஆத்மஞானம் ஒன்றையே கடைப்பிடித்தவர்கள். காரணகாரியங்களால் உடலைச் சோதித்து, எவ்வவற்றால் உடல் வளர்ந்து - அழிகின்றது என்பதை கடும் முயற்சியால் கண்டறிந்து, பொய் என்று சோல்லும் உடலை மெய் என்றாக்கி, அட்டமா சித்திகளையும் அடைந்தவர்கள். தமது உடலை தக்கபடி பலப்படுத்திக் கொண்டால் பிறப்பிறப்பினின்று நீங்கி விடலாம் என உணர்ந்து, பல்லாண்டு வாழும்  நித்திய வாழ்வைப் பெற்ற மகான்கள் கல்பமுறையிலும், யோக சாதனையிலும் அபாரசக்தி பெற்றும் - அழியும் உடலைக்கொண்டே, ஞான சக்தியால் மோட்ச சாதனை வழியைத் தேடுபவர்கள். உலோகங்களாலும், மந்திர சக்தியாலும் சுகனக்குளிகை கொண்டு பற்பல அண்டங்களையும் சுற்றி, ஆங்காங்குள்ள அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்தவர்கள். தங்களது மாமிச உடலை இலிங்கவடிவாக மாற்ற வல்லவர்கள். மனோசக்தியால் மருந்து கொள்ளாமலேயே உடலின் அணுவாதி தத்துவங்களை பிணியும், மரணமும் நீக்கவல்லவர்கள் - மனோசங்கற்பத்தினாலான மனோசக்தியை, நினைத்தபடி நாடி வழியாக செலுத்தாமலே, மின் சக்தியைப் போல் திக்கெங்கும் நடப்பவற்றை அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்து கொள்ளவும், எங்கேனுமுள்ள எவருடனும் பேசும் திறனும் படைத்தவர்கள்.

வடமொழியில் புகழப் பெற்றுள்ள - வாதவித்தையில் மட்டும் ஈடுபட்ட சில இரசாயன சாஸ்திரிகள், ஆத்ம ஞான சித்தி பெற்ற சித்தர்களுக்கு இணையாக மாட்டார்கள். ஆயின் வாதமுறையிலும் சிறுது ஞானம் அடையலாம் என்பதும் சித்தர்களின் கருத்தாகும். எனினும், சித்தர்கள் வாத - வைத்திய - யோக - ஞான - வழிகளில் சித்தியடைந்தும், உடல் அழியுமுன்னரே முக்தியடைய ஏதுவான சித்திகைளப் பெறுதல் அவசியமென்றும், உடல் அழிந்தால் பிறகு முக்தியடைய பல பிறவிகளை அடைய வேண்டுமென ஊகித்தறிந்தும் யோகவழியைக் கடைப்பிடித்தவர்களாகும். அதற்கு காயகல்பமும், அட்டசித்தியும் அவசியமெனக் கண்டறிந்தவர்கள். வாத - வைத்தியத்தில் ஈடுபட்டும், யோக - ஞான வழியில் கண்ட தங்களது அனுபவத்தையும், ரகசியங்களையும், அற்புதங்களையும் தங்கள் நூற்களின் மூலம் உலகிற்கு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். இன்றைய தமிழ் மருத்துவத்திற்கே காரண கர்த்தாவாகிய யாவரும் பயன் படுமாறு தூய தமிழில் செய்யுள் வடிவில் பாடிவைத்த மகான்களாகும். இவர்களது எண்ணிக்கை 7-8 லட்சம் எனப்பலவாறாகக் கூறப்படும். சித்திர்களின் வழி காட்டலினால் தான் இவ்வுலகமே இயங்கிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Wednesday, March 21, 2018

சித்தர்களது காலம் ஆதியாகும்

முதல் நிலம் தில்லை ஆகும். இங்ஙனமே, மண்-தஞ்சை (பிரகதீசன்) நீர் -திருவாணைக் காவல் (சம்புகேசன்), நெருப்பு - திருவண்ணாமலை (சோதீசன்), காற்று - திருக்குற்றாலம் (குற்றாலவாயன்), வெளி - தில்லை (சித்சபேசன்) ஆகியன ஐம்பெரும் இடங்களாகும்.

சமயம்
கடவுள், உயிர், உலகம், யாக்கை பிறவி, முக்தி, இன்பம் மற்றும் இதன் வகை தொகை வழியாகும். வழி - மூலத்தோர், நாதத்தோர், பெளத்தரும், சமனரும் ஆவர்.

வழிபாடு
சக்தி வழிபாடு, பூரணவழிபாடு, மோனவழிபாடு, சோதிவழிபாடு, மெய்வழிபாடு ஆகியனவாகும். (ஊமை, குருடன், செவிடன், முடவன், நொண்டி இவர்கள் வணங்கும் ஒரே வழிபாடு), தொகை - நவகோடியாகும் (சிறப்புடையோர் பதினெண்மராவர்)

பஞ்சவதிக்கு அருகில் இராமர் சந்தித்ததாகக் கூறப்படும் அகஸ்தியர் முதலாவது அகஸ்தியரல்ல. எனவே அவர் சித்தர் கல்வியைச் சார்ந்தவர் என்பது கட்டுக் கதையாகும். மேலும் அவர் வடபுலத்தைச் சார்ந்த பெரிய இருடி என்பதே ஐயத்திற்குரியதாகும். ஆகவே, வெவ்வேறு காலத்திலும் - இடத்திலும், அகஸ்தியர் என்ற பெயரில் பலர் இருந்துள்ளது புரியும் - புராணங்களில் வரும் அகஸ்தியர்கள் அனைவரும் ஒருவரே எனவும் - அவர்தான் மருத்துவம், மந்திரம், வேதை உட்பட பலவற்றையும் இயற்றினார் எனவும் கூறுவது முற்றிலும் தவறாகும். எனவே ஆதி அகத்தியரின் அல்லது மற்ற சித்தர்களின் மூல நூற்களின்று - அவர்களது வழி முறையினரால் பதியப்பெற்று, யாவும் அகத்தியர் பெயரிலேயே வெளியானவை என்பதே உண்மை. இதை முற்றிலும் கண்டறிவது என்பது சிரமமேயாகும். ஆயினும், உண்மையான, முதன்முதலான தமிழ் அகத்தியரும் - பிற்கால ஆரிய அகஸ்தியர்களும் முற்றிலும் வெவ்வேறாகும் என்பதை என்றும் மறக்கலாகாது.

சித்தர்களின் காலம்

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என பொதுவாகக் கூறுவார்கள். அவர்கள் அனேக காலத்திற்கு முன்பு இருந்தே வந்துள்ளதால் இதுதான் அவர்கள் வாழ்ந்த காலம் என்று கூற முடியவில்லை. நவதாதச் சித்தர்கள் தொன்று தொட்டு இருந்துள்ளதாகவும்-இவர்களுக்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே பதினெண் சித்தர்கள் தோன்றினர் எனவும் அறிகின்றோம். அயோத்தி மன்னர் இராமபிரான் வனவாசத்தின்போது, தண்டகாரணியத்தில் சித்தர்களிடமிருந்து பெளதிக-வாத முறைகளைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வான்மீகர் மூலமாக புற்றான் சோற்றின் மகிமையை அறிந்து, கடலை வற்றச் செய்து இலங்கைக்குச் சென்றதாக யாகோபு கூறுவார். மேலும், துங்கபத்திரா நதிக்கு வடபுறம், விந்திய மலையைச் சார்ந்த காடுகளில் அகஸ்தியர் வசித்து வந்த பின்னரே-சுமார் கி.மு.750-ல் ஆரியர் தென்னக எல்லையினுள் நுழையத் தொடங்கினர் எனவும்-அவர்கள் அகஸ்தியர் தலைமையின் கீழ்தான் தமிழகத்தை அடைந்ததாகவும் கருதப்படுகிறது. தன்வந்திரியின் மாணவரெனக் கூறப்படும் இந்த அகஸ்தியர் 18-24-48 சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து கல்வி புகட்டியதோடு, ஆயுள் வேதத்தையும் இங்கு நுழைத்தார் எனவும் கருதப்படும். இதன் மூலம், ஆரிய மார்க்கங்களை இங்கு புகட்டியதால் தான் - சித்தர்களது அரிய பெரிய செயல்களும், சித்தர்மார்க்கமும் கொள்கைகளும் சீரழிந்து வேரற்றப்போனது.

சகல கலைகளிலும்-ஆய்வுகளிலும்-மருத்துவத்திலும் மிகவும் அறிவுப் பூர்வமான சித்தர்களது காலம்-பொற்காலமாகும். அப்போது, புதிய சிந்தனைகள். தோன்றிச் செழித்தோங்கின. ஆயுள்வேதம் நுழைந்தபின் நிலையான கருத்துக்கள் மாறி புதியனவற்றில் மோகம் பிறந்தது. எனினும், பழைய முறைகளும் தொடர்ந்தன. 17-ஆம் நூற்றாண்டின், சர் தாமஸ் புரோனி என்பவர் சித்த மருத்துவ நுணுக்கங்களை ஒளிவீசும் வின்மீண்களெனக் கூறுவார். சித்தர்களது முக்குற்றக் கொள்கையும் மூளையிலுள்ள (பினியல்) சுரப்பியில் ஆன்மா தங்கியுள்ளதாகக் கூறுவதும் இன்றும் நிலைத்துள்ளது. ஒரு அறிஞரின் முடிவின்படி சித்த மருத்துவமுறை, கி.மு. 10000-4440 ஆண்டுகளிலேயே இருந்துள்ளதாகக் கூறுவர்.

பரப்பிரம்மம் என்றால் என்ன?

உலகில் பொருள் யாவும் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளை செய்கின்றனர். மீண்டும் தோன்றி, நிலைத்து, அழித்து வருகையில், இவை ஓரிடத்தில் ஒடுங்குவதே பரப்பிரம்மம் எனப்படும். 

சித்த மருத்துவம் நவீன ஆய்வு

நவீன ஆய்வாளர்கள், சித்த மருத்துவம் முதற் சங்க காலமாகிய 10000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதெனவும்-மற்றும் சிலர் வடக்கிலிருந்த ஆரியர் தென்னகத்தில் குடியேறுதற்கு முன்பே, அதாவது 27000 ஆண்டுகட்கு முன்னரே நாடெங்கும் பரவியிருந்தது எனவும் கூறுகின்றனர். மேலும், ஆயுள் வேதத்தின் அடிப்படை நூற்களான அஷ்டாங்க ஹிருதயம்-கி.பி. 900, சாரங்கதர சம்ஹிதை - கி.பி.1300, பரப்ப பிரகாசம் - கி.பி. 1600, கிரேக்க வைத்தியம் - கி.பி. 900, அலோபதி வைத்தியம்-கி.பி.1757, உரோமர் வைத்தியம் - கி.பி. 300, யூனானி வைத்தியம் - கி.பி. 600, ஆகிய காலங்களில் தோன்றியதாகக் கூறுவர். மேலும் தமிழ் மருத்துவத்தின் கோட்பாடுகளை மற்றவர் நன்கு புரிந்து கொள்ளாத நிலையிலும் கூட கிரேக்க, உரோம, அரேபியராலும் ஏன், கி.பி. 1800 முடிய ஐரோப்பிய வைத்தியர்களாலும் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதையும், நமது மருத்துவ முறைகளும், பொருட்பண்பு விரிவுரைகளும், அறுவைச் சிகிச்சை முறைகளும், கிரேக்க, உரோம, அராபிய, ஹீப்ரு, சீன, பாரசீக, தீபத்திய நாடுகளின் வைத்திய சாத்திரங்களிலும், நவீன ஐரோப்பிய முறைகளிலும் கூட இணைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். 

இந்தியாவில் கிட்டும் பலவகை மருந்துப் பொருட்களும் மற்ற நாட்டு மருத்துவ சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளதையும் அறியவும். இவையன்றி 2000-ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது குறளில் மருத்துவத்துக்கு தனியாக ஒரு அதிகாரம் வகுத்துள்ளதையும், சித்த மருத்துவத்தின் தத்துவங்களின் வாதம் (வளி), பித்தம், கபத்தைக் குறிப்பிடுமளவில் மிகினும் குறையினும் நோய் செய்யு நூலோர் வளி (வாயு) முதலாவெண்ணிய மூன்று என்ற குறட்பாவை இயற்றியதினின்றும் அந்நாளிலேயே சித்த மருத்துவம் சிறப்புற்றிருந்ததை அறியலாம். எனவே, எங்ஙனம் நோக்கினும் தேவர்கட்கு ஒப்பாகக் கூறவல்ல-மற்ற முறைகளிலெல்லாம் கையாளாத பல சிறப்பு முறைகளைக் கொண்ட சித்த மருத்துவமே உலகில் தொன்மையானதும், மேன்மையானதும் என்று உணர்ந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தின் தொன்மை

மனிதனுக்கு ஏற்படும் கேடுகளை நீக்கி, நலமுண்டாக்கி ஆயுளை நீடிக்கச் செய்வதற்கென தென்மொழியாகிய தேன் தமிழில் சிவபெருமான் உமையவளுக்கும்-அவள் நந்திப் பெருமானுக்கும்-அவர் தன்வந்திரிக்கும்-அவர் அச்சுவனித் தேவர்களுக்கும்-அவர்கள் விரிந்த அலைகளையுடைய கடலையுண்ட அகத்தியப் பெருமானுக்கும்-அவர் புலத்தியர்க்கும்-அவர் தருமசெளமியருக்கும்-அவர் தேரருக்கும்-அவர் தம் வழிவந்த ஏனையர்க்கும் இயம்பியதாகக் கூறப்படுகிறது. (இதுவன்றி வேறு சில பரம்பரைகளையும் கூறியுள்ளனர்). மேலும் மருத்துவ நூற்களை எழுதிய பெரியார்கள் தங்கள் வழிபடு கடவுளை வணங்கி மருத்துவப் பரம்பரையைக் கூறுகின்றனர். அதாவது அவர்கள் மருத்துவ நூற்களை எவ்வாறு அடைந்தனர் என்பதை சுருக்கமாக இயம்பியுள்ளனர். வடமொழி (சமசுகிருதம்) நூற்களை எழுதியவர்கள் வாக்படர், அச்சுவினித் தேவர் ஆகிய இருடிகளிடம் இருந்து தன்வந்திரி பகவான் மூலம் ஆயுர்வேதம் வந்தது எனவும், தென்மொழி (தமிழ்) நூற்களை எழுதியவர்கள், அவை பரமசிவனிடமிருந்து, நந்தி வழியாகவும், அவரிடமிருந்து அகத்தியர்-புலத்தியர் முதலிய சித்தர்கள் வழியாகவும் சித்த மருத்துவம் கிடைத்தது எனவும் கூறியுள்ளனர்.

அன்பர்களே, இயற்கை-செயற்கை ஒழுக்க வழிகளில் பயின்ற இக்காலத்தவராகிய நமக்கு இது ஒரு புதுமையாகவே தோன்றும், ஏனெனில், உருவமாகவும், உருவமின்றியும் எங்கும் நிறைந்தவராயிருக்கும் கடவுளிடத்திலிருந்தும், தேவர்களிடத்திலிருந்தும் அக்காலத்தில் இம்மருத்துவ நூல்கள் தோன்றின என்றும், இக்காலத்துப் பெரும்பாலும் சிதலுக்கு இரையாகிய அம்மருத்துவ நூற்களையெல்லாம் மீண்டும் அப்பெரியார்கள் ஏன் நமக்கு அளிக்கலாகாது? என்றும், மேற்கூறிய கடவுளிடத்திலிருந்து எங்ஙனம் இந்த வைத்திய நூற்கள் உண்டாகக்கூடும்? என்றும், இவை நவீன ஆய்விற்கொப்ப உள்ளனவா? என்றும், இவை நவீன ஆய்விற்கொப்ப உள்ளனவா? என்றும் கேட்க வழி ஏற்படுதலின், இவையெல்லாம் புராணக்கதை என்றே எண்ணுவதற்கு ஏதுவாகின்றன. ஆயினும் மருத்துவத்தில் மிக்க தேற்சி பெற்று, நன்முறையில் ஒழுகி, மேன்மையுடன் புகழ்பெற்று வாழ்ந்த பெரியோர்களைக் கடவுளைப் போன்றே போற்றி வாழ்தல் தமிழ் மக்களின் இயல்பாதலை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே அக்காலத்தில் மிக்க கீர்த்தியுடன் வாழ்ந்த மருத்துவப் பெரியோர்களைக் கடவுள் என்றே மதித்துக் கூறியதாக கொள்வோம். (மருத்துவ நூற்களை மட்டுமின்றி, ஏனைய தமிழ் நூற்களும் தேவர்களிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெற்றனவாகும் என்று கூறப்படுவதையும் நாம் அறிவோம்.) மற்றும், மூலிகை வகை முதலியன சித்தர்களிடம் தத்தமக்கு உரிய பண்பு-குணநலன்கள்-வீரியம் முதலியன பற்றி தாமே எடுத்து கூறிப்பயனுறச் செய்ததாகவும், பறவை இனம், மிருகங்கள், முதலிய தத்தமக்கு நோயுற்றபோது அவற்றினின்றும் விடுபட உட்கொண்ட மூலிகை முதலியவற்றைக் கண்டறிந்து மாந்தன் மருந்துகளைக் கண்டறிந்தான் என்றும் கூறுவதுமுண்டு-நமது சித்தர்களின் பண்டைய முறையிலுள்ளவற்றையே, புதிய பெயரில் இன்றைய நவீன ஆய்வாளர்கள் கூறுகின்றனரேயன்றி, புதியதாக எதையும் கூறிவிடவில்லை.

Tuesday, March 20, 2018

தமிழகமும்-தமிழ் மருத்துவமும்

உலகம் உண்டானபொழுது முதன் முதலில் தோன்றிய நிலப்பரப்பு தமிழகமும் அதனுடன் இணைந்திருந்து மறைந்த நிலப்பகுதிகளுமேயாகும் என்பதையும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியினரின் மொழியும்-கலைகளும்-மருத்துவமும்-பண்பாடும் (தோன்றி மறைந்துவரும் பல்பொருள் பெயருள்ள நாடுகளைப் போலன்றி) பல்லாயிரம் ஆண்டுகட்குப்பின் தோன்றிய உலகின் மற்ற எல்லா நாட்டினர்க்கும் அன்றும்-இன்றும்-என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்துவரும் மேன்மை மிக்கவை என்பதையும் உலகப் பேராய்வாளர்களும், அறிஞர்களும் ஒப்புக்கொண்ட, மறுக்க இயலாத உண்மையாகும் என்று அறிவீர்கள். உலக வாழ் மக்களின் நல்வாழ்விற்குரிய சகலவிதமான வற்றாத வளங்களையும் வாரிக் குவித்துள்ள இயற்கையன்னை, தான் கொண்டு, விதிமுறைகைள மீறி நடக்கும் மனிதனுக்கு ஏற்ற தண்டனையளித்து, அவன் தமது குற்றமுணர்ந்து, வருந்தித் திருந்துவதற்கென அவன் உடன் பிறப்புத் தண்டனையாக பலவகையான பிணிகளையும் ஏற்படுத்தி உள்ளதை அறிவோம்.

அங்ஙனம் மனிதனுக்கு தீவினைக்கேற்ப ஏற்படும் நோய்கைளத் தீர்ப்பதற்கென அவன் வாழும் நாட்டிலும், காட்டிலும் எண்ணற்ற மூலிகைகளையும்-தாதுப்பொருட்களையும்-உயிரினங்களையும் தோற்று வித்த இயற்கையன்னை, அவற்றினைக் கையாண்டு பிணி நீக்கிப் பெருவாழ்வு பெறும் வழிமுறைகளையும் வகுத்துள்ளதையே மருத்துவம் என்று கூறுகின்றோம். இங்கு மருந்து என்ற சொல் வலித்தல் விகாரம் பெற்று மருத்து எனவாகி, அதனைக் கொண்டு புரியும் செயலையுணர்த்த மருத்துவம் என அமைந்தது. இதனை, வைத்தியம்-சிகிச்சை-பரிகாரம்-மாற்று மருந்து-நீக்குகை-அகற்றல் என்ற வேறு சொற்களாலும் அழைப்பர். மருத்துவம் என்ற சொல் நோயை மறுத்தல் என்பதிலிருந்து பிறந்ததாகவும் கூறுவதுண்டு. மருத்துவ முறைகளில் இன்று சித்த மருத்துவத்தோடு ஆயுள்வேதம், யூனானி, உரோமர் வைத்தியம், கிரேக்கர் வைத்தியம், அலோபதி, ஓமியோபதி, பயோகெமிஸ்ட்ரி, குரோமோபதி, நேட்சுரோபதி, ஹைடிரோபதி, அக்குப்பஞ்சர், ஆல்டர்நேட்டிவ், மெஸ்மரிச முறை என்ற பல்வேறு வகையான வைத்திய முறைகளும் நிலவிவந்ததாலும், இவை அனைத்திலும் முதலில் தோன்றியதும், எக்காலத்திற்கும் ஏற்றவண்ணம் வாழ்க்கை முறையை ஒட்டியதும், தத்துவார்த்த விஞ்ஞானப்பூர்வமானதும், என்றென்றும் அழியாததுமாகிய தமிழ் மருத்துவமே மிக்க மேன்மையுடையது என்பதில் அறிவுடையோர்க்கு ஐயமிராது.

4. ஞானம் (தத்துவம்-விவேகம்

உலகத் தோற்றங்களில், மனிதனுக்கு மட்டுமே சகல வித சக்திகளும் உடலினுள் மறைந்துள்ளது. இதனால் மனிதனை இறைவனின் ஆற்றலுக்கு இணையாகவே கூறலாம். ஆயின் இவனோ இச்சக்திகளை சிறிதும் உணராமலும், அவற்றை தன் வயமாக்கிக் கொள்ள முயலாமலும், வழியறியாமலும் பெருங்குற்றம் புரிந்த வனாகின்றனான். 

நமது உடலில் உயிர் நிலைத்திருக்கக் காரணமாகவுள்ள ஆத்மாவுக்கு இவ்விஷயத்தில் - பஞ்சபூதம், ஆறாதாரம், முக்குணம், மூன்றுநாடி, தசவாயு-உள்ளிட்ட 96-தத்துவங்களும் ஆதரவாகவே உள்ளன. ஆயின், மனிதனுக்கு இயற்கையாயுள்ள பூர்ணசக்தி, மாயையினால் மறைக்கப்பட்டு, சரியான பாதையில் செல்லவிடாமல் தடுக்கும். அப்படித் தடுக்காதபடி செய்துவிட்டால், இயற்கை சக்தியானது தனது முழு வலிமையையும் காட்டும். இதனைக் கண்டறிந்து வெல்வதே ஞானமாகும். (அடியிலிருந்து உச்சகட்டம் வரை விளக்கப் பட்டுள்ளதும், நமக்கே உரியதுமான 96-தத்துவங்களை சித்தாந்திகளும், வேதாந்திகளும் ஒப்புக் கொண்டாலும், வேதாந்திகள் இதில் 36-ஐ மட்டும் ஏற்றுக் கொண்டுள்ள நிலை மாறி, மென்மேலும் ஆய்தறிதலின் மூலம் முழுமையாக ஏற்க முன்வரக் கூடும்.)

3. யோகம் (தியானம்-ஒடுக்கம்)

மாந்தருக்கு இயற்கையிலே உள்ள காந்தசக்தியினால்-பிராணாயாமத்தினால் விளைந்த வலிமையினால் இவ்வுலகையே தன் வயமாக்கி, தன் ஆளுகைக் குட்படுத்தவியலும் யோகப்பயிற்சி மட்டுமே பிறப்பிறப்பை வெகு விரைவிலும், சுருக்கமாகவும் முடித்துக் கொள்ள குறுக்கு வழியாகும். இதனை, ஒரு குரு இருந்து தொட்டுக்காட்டாவிடில் உடல் நலம் கெடும். இதில், தூய மனமே ஒரு கருவாக தன்னுள் நின்று வழி காட்டும். அதாவது, இறை வணக்கம் மேலோங்க தன்னைத்தானறியும் அறிவு விளக்கமும் மிகுதியாகி, அப்படி உயர்நிலை பெற்ற மனமே குருவாக நிற்கும். குண்டலினிக்குள் வலிவும், நரம்பு சக்தியும் தக்கபடி இல்லாவிடில் உடலில் குருதி ஓட்டமிராது, இருதயம் துடிக்காது, நுரையீரல் இயங்காது, இதர உறுப்புகளும் தமது செயலைப் புரியாது. 

ஒரு யோகியால் பஞ்சபூதங்களை அடக்கி, இயற்கை பேதங்களை மாற்றவியலும், தோற்றங்களுள் எவ்வித வடிவும் பெறலாம். தனது உடலையே போக்கவும், மீண்டும் ஆக்கவும் செய்யலாம். பரகாயப் பிரவேசமாகிய, பிறர் உடலினுள் புகுந்து விடலாம். பிணத்தில் கூடப்புகுந்து, அவ்வுடலோடு எழுந்து நடமாடலாம். புதிதாகவே மனிதரையும், மனதையும், செயல்களையும் உண்டுபண்ணலாம்.

Monday, March 19, 2018

2. வைத்தியம் (மருத்துவம்-சிகிச்சை)

சித்தர்கள் கூற்றுப்படி, மனிதனுக்கு ஏற்படும் பிணகளும், இதர துன்பங்களும்-கிரகக் கோளாறுகளும், பூர்வ கருமானுசாரங்களும், துர்தேவதைகள் போன்றவற்றால்தான் ஏற்படுகிறது. எனவே ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்யுமுன் அவனது சாதகப்படி கிரகநிலையறிந்து, தீயவிளைவுகளைத் தடுக்கவுள்ள பல நூதனமான விதிகளையும், மாந்திரீக மனோவசியக் கிரியைகளையும், அனுஷ்டானங்களையும் அறிந்து செயல்பட வேண்டும்.

மேலும், நோய்கள் இயற்கையில் தானாகவே வந்து, தானாகவே நீங்குவதால்-மருத்துவர்கள், மனிதனுக்கு இயல்பாய் ஏற்படும் குற்றங்கள் எப்படி வந்தது என அறிதல் வேண்டும் மற்றும், இயற்கை நியதிகளை நன்கு புரியாமலும், அதற்குறிய உண்மை அறிவைச் செலுத்தாமலும் சிகிச்சை செய்வது-தனது கொள்கை, கருத்து, மனப்போக்கு இவற்றை கொண்டதாக இருக்குமேதவிர, உண்மையில் பிணிகளை நீக்குவதாக அமையாது. எனவே, மனிதன் தனது சுய சக்தியினால் எதுவும் செய்துவிட முடியாது என்பதால், தனக்கேற்படும் நம்பிக்கையின் ஆதரவினால் தான் எதனையும் சாதிக்க இயலும் என்ற உண்மையை மருத்துவன் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

1. வாதம் (வகாரம்-வேதை)

இது இரும்பு, வங்கம், செம்பு முதலிய மலின உலோகங்களை உயர்ந்த மாற்றுடைய பொன்னாகச் செய்யும் கலையாகும். இதனை, மருந்துப் பொருட்களிலுள்ள வியத்தகு நற்குணங்கள்-காரசார உப்புக்கள், செய நீர், திராவகங்கள் முதலிய இரசாயனப் பொருட்கள்-இரச கந்தக பாடாணங்களைக் கட்டுதல்-தம்பனம்-மாரணம் முதலிய மந்திர அல்லது மாந்தீரீகம்-யோக சக்தியின் வலிமையினாலான மனோதத்துவம் போன்றவற்றின் உதவியால் சாதிக்கலாம். இதில் முழுமை பெற்றவர்கள் வேறெங்கும் கிடையாது. 

வாதியானவன் விடாமுயற்சி, தருமசிந்தை, தயாளகுணம், மேலான மனச் சுத்தம் இவற்றோடு, முக்கியமாக தெய்வ பக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். பேராசையும், பொன்-பொருள்-பணத்தில் ஆசை இருக்கக்கூடாது. மேலும் பிறவியிலேயே சோதிட கிரகங்களின்படி வாதிக்குள் சக்திகள், பூர்வ கருமானுசாரப்படி அமைந்திருக்க வேண்டும். மற்றும் ஒரு சிசு கருத்தரிக்கும்போது பஞ்சபூதங்களின் தொடர்பு எப்படி முக்கியமோ, அதேபோல் வாதம் சித்தியாகவும் அவை கிரமப்படி அமையவேண்டும். இதில் தவறு ஏற்படின் எப்படி கரு சிதைந்துவிடுமோ, அதேபோல் வாதமும் தவறினால் கைகூடாமல் போய்விடும்.

சித்தர்களின் கொள்கைகள்

அனைத்து சித்தர்களுமே அவர்களின் நூல்களில் வாதம்-வைத்தியம்-யோகம்-ஞானம் ஆகிய விஷயங்களில் தமது கருத்துக்களையும், கொள்கைகளையும் மிகத்தெளிவாகக் கூறியுள்ளனர். மேற்கண்டவற்றுள் அவர்கள் கொண்ட கோட்பாடுகளை சுருக்கமாக கீழே கூறப்பட்டுள்ளது.
1. வாதம் (வகாரம்-வேதை)
2. வைத்தியம் (மருத்துவ சிகிச்சை)
3. யோகம் (தியானம்-ஒடுக்கம்)
4. ஞானம் ((தத்துவ-விவேகம்)

Sunday, March 18, 2018

குழந்தை மூளையின் செயல்திறனை அதிகரிக்க

இந்த காலத்து பிள்ளைகள் எல்.கே.ஜி படிக்கிற குழந்தைகள் எடுத்துச் செல்லும் புத்தகத்தைப்பார்த்தால் 12-ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுடைய அளவுக்கு பெரியதாக இருக்கிறது. இந்த சிறிய வயதிலேயே குழந்தையின் மூளையில்  அதிகமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால் அவர்கள் மன அழுத்தத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க நல்ல ஆரோக்கியமான உணவுகைளப் பற்றி பார்ப்போம்.

  •  தினந்தோறும் மதிய உணவில் தயிர் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.
  •  மீன் வைட்டமின் டி உள்ளதால் சிறியவகை மீன்களை குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். பகலில் மட்டுமே கொடுக்க வேண்டும். இரவில் கொடுக்கக்கூடாது.
  • நாட்டுக்கோழி முட்டையை நன்கு வேகவைத்து தினமும் காலையில் கொடுக்க வேண்டும்.
  • பாலில் புரோட்டின், வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் தினமும் இரண்டு வேலை பால் கொடுக்கலாம். தயவுசெய்து பாக்கெட் பால் கொடுக்காதீர்கள். 
  • அதிகமாக பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, சுண்டல், கடலைப்பருப்பு, சிவப்பு காராமணி, தட்டைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு.

Saturday, March 17, 2018

சித்த மருத்துவம் யாரால் போதிக்கப் பெற்றது?

மாந்த இனத்திற்கு நலமூட்டி ஆயுளை நீடிக்கச் செய்வதற்கென மருத்துவ முறையினை தமிழ் மொழியில் சிவபெருமான் உமையவளுக்கும் - அவள் நந்தி தேவருக்கும் - அவர் தன்வந்திரிக்கும் - அவர் அச்சுவினித் தேவர்கட்கும் - அவர்கள் அகத்தியருக்கும் - அவர் புலத்தியருக்கும் - அவர் செளமியர்க்கும் - அவர் தேரையருக்கும் கற்றுக்கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இது சித்தர்களால் உலகில் பரவியதாலேயே சித்தர் மருத்துவம் எனப் பெயர் பெற்றது.

மருத்துவம் சொல் எப்படி ஏற்பட்டது?

மனிதனுக்கு வரும் பிணிகளை தீர்ப்பதற்கென தாவர தாது - சீவ இனங்களைக் கையாண்டு நலமுறும் வழிகளை வகுத்து உள்ளதே "மருத்துவம்" ஆகும். இங்கு மருந்து என்ற சொல் வலித்தல் விகாரம் பெற்று மருத்து எனவாகி அதனைக் கொண்டு புரியும் செயலையுணர்த்த மருத்துவம் என அமைந்தது. இச்சொல் நோயை மருத்தல் என்பதிலிருந்து பிறந்ததாகவும் கூறுவர். இதனை வைத்தியம் - சிகிச்சை - பரிகாரம் - மாற்று மருந்து - நீக்குகை - அகற்றல் எனவும் அழைப்பர்.

பழனி சித்த மருத்துவ சங்கம்

நான் இந்த வலைதளத்தை உருவாக்குவதற்கு உதவியாக இருந்து எனக்கு ஊக்கப்படுத்திய பழனி சித்த மருத்துவ சங்கத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ் மருத்துவம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டு இருக்கும் மதுரை சித்த மருத்துவக் குருகுலத்தின் எனது குருமார்களின் நல் ஆசியோடு, அவர்கள் வெளியிட்டுள்ள சித்த (தமிழ்) மருத்துவப் பாடப் பயிற்சி நூல் மற்றும் அவர்களின் புகழ் இந்த உலகெங்கும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக எனக்கு அளித்த சித்த மருத்துவக் குருகுலம் கல்வி அறிவை இந்த உலகெல்லாம் பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் எழுதிய நூலை அப்படியே இதில் பதிவு செய்துள்ளேன். இது சித்த மருத்துவம் படிக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம்!

Friday, March 16, 2018

சிறுநீரக நோயின் ஆரோக்கியமான உணவுகள் - Healthy Foods for People with Kidney Disease

உணவுகள் செரித்தப்பின் இறுதியாக சிறுநீரகம் யூரியா மற்றும் கிரியாட்டின் கழிவுகளை நம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லையென்றால் இந்த கழிவுகள் நமது இரத்தத்தில் கலந்து கேடுகளை உண்டாக்கும். இந்த சிறுநீரகம் நமது உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை சரியான அளவில் வைக்க உதவுகிறது. 

புரதம், கலோரிசத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் திரவ ஆகாரங்களை குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ளவும்.

பொட்டாசியம் 0 முதல் 100 மி.கிராம் உள்ள காய்கறிகள் 

1. வெந்தயக்கீரை
2. லெட்டூஸ்
3. பீட்ரூட்
4. சிவப்பு முள்ளங்கி
5. சுரைக்காய்
6. அவரைக்காய்
7. வெள்ளரிக்காய்
8. மொச்சைக்காய்
9. நூல்கோல்
10. பட்டாணி
11. பீர்க்கங்காய்
12. புடலங்காய்
13. சவ்சவ்
14. மாங்காய்

பொட்டாசியம் 101 முதல் 200 மி.கிராம் உள்ள காய்கறிகள்

1. முட்டைகோஸ்
2. கேரட்
3. சின்ன வெங்காயம்
4. வெள்ளை முள்ளங்கி
5. பாகற்காய்
6. கத்தரிக்காய்
7. காலிபிளவர்
8. பீன்ஸ்
9. வெண்டைக்காய்
10. வெங்காயத்தாள்
11. வாழைப்பூ
12. வாழைக்காய்
13. பூசணிக்காய்
14. பச்சை தக்காளி

பொட்டாசியம் 201 மி.கிராம் மேல் உள்ள காய்கறிகள்

1. சிறுகீரை
2. கொத்தமல்லி தழை
3. முருங்கை கீரை
4. பசலைக்கீரை
5. சேப்பங்கிழங்கு
6. சர்க்கரை வள்ளிகிழங்கு
7. மரவள்ளிக்கிழங்கு
8. சேனைக்கிழங்கு
9. முருங்கக்காய்
10. பப்பாளிக்காய்