சித்தர்கள் கூற்றுப்படி, மனிதனுக்கு ஏற்படும் பிணகளும், இதர துன்பங்களும்-கிரகக் கோளாறுகளும், பூர்வ கருமானுசாரங்களும், துர்தேவதைகள் போன்றவற்றால்தான் ஏற்படுகிறது. எனவே ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்யுமுன் அவனது சாதகப்படி கிரகநிலையறிந்து, தீயவிளைவுகளைத் தடுக்கவுள்ள பல நூதனமான விதிகளையும், மாந்திரீக மனோவசியக் கிரியைகளையும், அனுஷ்டானங்களையும் அறிந்து செயல்பட வேண்டும்.
மேலும், நோய்கள் இயற்கையில் தானாகவே வந்து, தானாகவே நீங்குவதால்-மருத்துவர்கள், மனிதனுக்கு இயல்பாய் ஏற்படும் குற்றங்கள் எப்படி வந்தது என அறிதல் வேண்டும் மற்றும், இயற்கை நியதிகளை நன்கு புரியாமலும், அதற்குறிய உண்மை அறிவைச் செலுத்தாமலும் சிகிச்சை செய்வது-தனது கொள்கை, கருத்து, மனப்போக்கு இவற்றை கொண்டதாக இருக்குமேதவிர, உண்மையில் பிணிகளை நீக்குவதாக அமையாது. எனவே, மனிதன் தனது சுய சக்தியினால் எதுவும் செய்துவிட முடியாது என்பதால், தனக்கேற்படும் நம்பிக்கையின் ஆதரவினால் தான் எதனையும் சாதிக்க இயலும் என்ற உண்மையை மருத்துவன் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam








0 comments:
Post a Comment