Thursday, July 5, 2018

மனித உடலிலுள்ள 96 தத்துவங்கள்


மனித உடல் இயக்கமானது 96 தத்துவங்களைக்கொண்டதாகும். முதல் உடல் பாகமாகிய25 தத்துவங்கள் பருவுடலாகும் (ஸ்தூல). இரண்டாவது நடுஉடல் பாகமாகிய 35 தத்துவங்கள் நுண் உடலாகும் (சூக்கும) இறுதி உடல் பாகமாகிய 36 தத்துவங்கள்காரண உலாகும். இந்த 96 தத்துவங்களும் மனிதஉடலை இயக்கும் ஒரு கருவிகளாகும், இவற்றின்வகைகளை நன்கு அறிந்தவரே சிறந்தஆசான் என்பார்கள்.

"சொல்லுவோம்பூதாதி ஓரைந் தாகும்
       சூட்சமாய்பொறிஐந்து புல னைந்து
வெல்லுவோம்கன்மவிந் திரிய மைந்து
       விதமானஞானவிந் திரிய மைந்து
நல்லுவோம்ணமது நான்கே யாகும்
       நலமான அறிவொன்று நாடி பத்து
அல்லவேதசவாயு பத்து மாகும்
       ஆனதொருஆசயமஞ்சு கோச மஞ்சே"

"அஞ்சானஆதார மாறு மாகும்
       அப்பனேமண்டல மூன்று முலமூன்றாகும்
துஞ்சாததோடமூன் றீடணை மூன்றி
       தொடர்ந்தகுணமூன்றா கும்
தஞ்சமுள்ளவினைரெண்டு ராகமெட்டு
       சார்ந்ததொரு அவஸ்தை அஞ்சு
கொஞ்சாதகருவிதொண் ணூற்றாலும்
       குறிப்பாகஒவ்வொன்றாய் விவரிப் போமே"
                                                                                       (வர்ம கண்ணாடி - 500)

"ஆச்சுதேதொடுகருவி தொண்ணூற் றாறும்
       அசைந்தாடும்தொடுவர்மம் ஆச்சுதப்பா
வீச்சுதேபடுவர்மம் பன்னிரண் டுந்தான்
       விதமானகருவியில் காணார் காணார்
வாச்சுதேஇவைகடடி நூற்றெட் டாச்சு
வகையறிந்தோன்றிவா னவனே ஆசான்
                                                                                       (வர்ம பஞ்சீகரணப்பின்னல் - 1500)

0 comments:

Post a Comment